தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்டின் வடமேற்கு பகுதியில் வளர்ப்பு நாய் கடித்துக் குதறியதில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வையல்லா ஸ்டூவர்;ட்டில் என்ற 39 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த துணை மருத்துவர்கள், அவருக்கு முதலுதவி அளித்தபோதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் இருந்த வீதி மூடப்பட்டது. நாயை பொலிஸ் பாதுகாப்பில் எடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.