இஸ்லாமோபோபியா என்றழைக்கப்படும் இஸ்லாம் மீதான அச்சம் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் செயற்பாடுகளுக்கு எதிராக போராடுவதற்கு சிறப்பு தூதுவர் ஒருவரை லேபர் அரசு நியமிக்கவுள்ளது.
பிரிட்டனில் பிறந்த கல்வியாளரான Aftab Malik இப்பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
யூத விரோத போக்கை தடுப்பதற்கும், இஸ்லாமோபோபியாவிற்கு எதிராகவும் இரு தூதுவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி அறிவித்திருந்தார்.
இதற்கமைய யூத எதிர்ப்பு சிறப்பு தூதுவராக சட்டத்தரணி r Jillian Segal நியமிக்கப்பட்டார்.
அந்நியமனம் வழங்கப்பட்டு சில மாதங்களுக்கு பிறகே மற்றைய தூதுவர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.