மெல்பேர்ன் வடக்கு பகுதியில் நடந்த பயங்கரமான கத்திக்குத்து தாக்குதல் ம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு கையில் காயம் உள்ளதால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைகளின் பின்னர் விசாரணை நடத்தப்படும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்படி கத்திக்குத்து தாக்குதலில் 40 வயது நபரொருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையிலேயே தற்போது இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞன் நீதிமன்றத்திலும், சிறுவன் சிறார் நீதிமன்றத்திலும் முற்படுத்தப்படவுள்ளனர்.