குயின்ஸ்லாந்து Gold Coast பகுதியில் 10 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குறித்த சிறுமி அவரின் தாயாரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகின்றது.
தனது மகள் வீட்டில் சடலமாக கிடப்பதைக் கண்டு அது தொடர்பில் தந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார், வீட்டிலிருந்து வெளியேறி இருந்த தாயை இரவு 10 மணியளவில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள 46 வயது பெண்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.