களவாடப்பட்ட காரை சிறுவன் ஒருவர் ஓட்டிச்சென்ற நிலையில் குறித்த வாகனம் மோதி 21 யுவதி படுகாயமடைந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
17 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற வாகனத்தை பொலிஸார் பின்தொடர்ந்துள்ளனர்.
இதனால் அவர் அதனை வேகமாக செலுத்தியுள்ளார். பல வாகங்கள்மீது மோதி சென்றுள்ளார். இதனால் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனத்தை பின்தொடர்வது நிறுத்தப்பட்டது. எனினும், கண்காணிப்பு இடம்பெற்றது என்று நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
பி.எம்.டபிள்யூவில் பயணித்த யுவதியொருவரே தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.