இலங்கையில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெண்களையும், சிறுமிகளையும் பாதுகாக்க ஆஸ்திரேலியாவும், ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியமும் கைகோர்த்துள்ளன.
அதன்படி, சூறாவளியால் அதிகளவில் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களுக்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் 5 இலட்சம் ஆஸ்திரேலிய டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளது.
இந்த நிதியுதவி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புதல், உயிர்காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல், மற்றும் பாலின வன்முறைகளுக்கு எதிரான அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படவுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக ஏற்கனவே ஆஸ்திரேலியா நிதி உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.