ஆஸ்திரேலியாவுக்கு 525 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இறக்குமதி செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய சிட்னியை சேர்ந்த நபர், பேர்த் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார்.
2025 நவம்பர் மாதமே குறித்த போதைப்பொருள் மேற்கு ஆஸ்திரேலிய கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் ஐந்தாவது நபராவார்.
நேற்று முன்தினமே சிட்னியில் வைத்து 22 வயதான குறித்த நபர் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.