ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது.
தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த உடனேயே பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டார்.
மற்றொருவர் சுடப்பட்டு காவல்துறையினரின் பிடியில் உள்ளார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில்12 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
மேலும் காயமடைந்த சிலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்தார்.