விக்டோரிpயாவில் ஒன்பது பேருடன் சென்ற மினி வேனொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் படு காயமடைந்துள்ளனர்.
மெல்போர்னுக்கு வடக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் முக்காட்டாவில் உள்ள செப்பல் வீதியிலேயே நேற்று மாலை விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இன்னும் முறையாக அடையாளம் காணப்படாத நான்கு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ஐவரில் மூன்று சிறார்களும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் விமானம்மூலம் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.