சிட்னியில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய இரு துப்பாக்கிதாரிகளின் நகர்வுகள் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரும் கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
50 வயது துப்பாக்கிதாரியான சஜிட் அக்ரம் தன்னை இந்திய பிரஜையாக அடையாளப்படுத்திக்கொண்டே பிலிப்பைன்ஸ்க்குள் நுழைந்துள்ளார்.
அவரது 24 வயதான நவீத் அக்ரம் தன்னை ஆஸ்திரேலிய பிரஜையாக அடையாளப்படுத்தியுள்ளார்.
இவர்கள் நவம்பர் முதலாம் திகதியே மணிலா சென்றுள்ளனர். பின்னர் 28 ஆம் திகதி அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்பியுள்ளனர் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிட்னி , போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
50 வயதான துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுள்ளார். 24 வயதான நபர் காயமடைந்த நிலையில் பொலிஸ் காவலில் உள்ளார்.
"அவர்கள் ஏன் பிலிப்பைன்சுக்கு சென்றனர், அதன் நோக்கம் என்ன ? மற்றும் அவர்கள் அங்கு இருந்தபோது எங்கு சென்றார்கள் ? என்பன குறித்து விசாரணை வேட்;டை இடம்பெறுகின்றது.