ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் அவசர கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, துப்பாக்கி சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர் திருத்தங்கள் தொடர்பில் ஆராயவே அவசர கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மாநில நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி உரிமம் உட்பட முக்கிய சில மறுசீரமைப்புகள் இடம்பெறவுள்ளன எனவும், சட்ட திருத்தம் பற்றி எதிரணியுடன் கலந்துரையாடப்படும் எனவும் மாநில பிரீமியர் தெரிவித்தார்.
துப்பாக்கி உரிமம் இரத்து செய்யப்படும்போது, அது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்குள்ள வாய்ப்பு சட்ட திருத்தம்மூலம் இல்லாது செய்யப்படும்.
நியூ சவூத் வேல்ஸில் நபரொருவர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கியின் அளவில் தற்போது எவ்வித வரையறையும் இல்லை.
போண்டி தாக்குதலை நடத்திய நபரிடம் ஆறு துப்பாக்கி உரிமங்கள் இருந்துள்ளன.