சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் பசில் பாலேந்திரன் குற்றவாளியென ஜுரிகள் சபை தீர்ப்பளித்துள்ளது.
இவர் மெல்பேர்ன் வடக்கு பகுதியில் இலங்கை உணவகமொன்றை நடத்திவந்துள்ளார். உள்ளூர் தேவாலயத்தில் தன்னார்வலராகவும் செயல்பட்டுள்ளார்.
மெல்பேர்னிலுள்ள உள்ள இலங்கைச் சமூகத்தைச் சேர்ந்த இவர், புனித பிரான்சிஸ் தேவாலயம் மற்றும் உள்ளூர் தமிழ் மொழிப் பள்ளியிலும் அங்கம் வகித்துள்ளார்.
64 வயதான பசில் பாலேந்திரன் 2024 ஆம் ஆண்டு முதல் பண்டூராவில் "நோனா ரெஸ்டூரன்ட்" எனும் இலங்கை உணவகத்தை நடத்தி வந்துள்ளார்.
மேற்படி சிறுமியை 5 ஆண்டுகளாக அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட் டுதொடர்பான வழக்கு விசாரணையில் இவர் திங்களன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
2010 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே குற்றம் நடந்துள்ளது எனக் கூறப்படுகின்றது. இது குறித்து 2021 செப்டம்பரில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாகத் துன்பப்படத் தேவையில்லை என்பதையும், குற்றவாளி தங்களுக்குத் தெரிந்தவராகக் கூட இருக்கலாம் என்பதையும் உலகிற்கு உணர்த்தவே பொலிஸ் நிலையம் சென்றதாக பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்துள்ளார்.
“ குற்றவாளி என்னிடமிருந்து பலவற்றை பறித்துக்கொண்டார். ஆனால் என் உயிரை பறிக்க முடியவில்லை. என்னை நம்பியவர்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் நீதிக்காக நான் போராடினேன்.” எனவும் கூறினார்.
இந்த பாதிப்பிலிருந்து மீள அவரது குடும்பத்தினர் அவரை வேறொரு மாநிலத்திற்கு மாற்றியதாகவும், இதனால் அவர் தனது நண்பர்களையும், தனது மருமகன்கள் வளர்வதைப் பார்க்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டதாகத் தெரிவித்தார்.
எனினும், இத்தனை தியாகங்களுக்கு மத்தியிலும், ன் உயர்நிலைப் பள்ளியில் 92.5 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். ஒவ்வொரு மோசமான நினைவுகளையும், கனவுகளையும், தூக்கமில்லாத இரவுகளையும் கடந்து நான் உழைத்தேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று நீதிமன்றத்தால் வழங்கப்படவுள்ளது.