தனது கணவன் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் மன்னிப்பு கோரியுள்ளார்.
குறித்த சம்பவம் தனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் கவலை வெளியிட்டார்.
நேற்று சுவாசப் பரிசோதனையின்போதே பிரீமியரின் கணவர் மது அருந்தியமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், உரிமமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
தனது கணவரும், குடும்ப உறுப்பினர்களும் பப்பில் தங்கள் மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இரவு மருந்தும் எடுத்துள்ளார்.
“ முதல்நாள் இரவு மதுவுடன் மருந்தும் கலந்திருந்ததால் மறுநாள் காலை அவர் வாகனம் ஓட்டி இருக்கக்கூடாது.” எனவும் பிரீமியர் குறிப்பிட்டார்.