ஆஸ்திரேலியா சிட்னி தென்மேற்கில் நேற்று நடந்த பொலிஸ் தேடுதல் வேட்டையின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரிடம் ஆஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்தியுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சிட்னி, போண்டி பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன.
அந்தவகையில் சிட்னி, லிவர்பூல் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது குழுவொன்றை சேர்ந்த எழுவர் நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தீவிரவாத சிந்தாந்தத்தை கொண்டிருந்த குழுவொன்றை சேர்ந்தவர்களென புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் விக்டோரியாவில் இருந்து போண்டி பகுதிக்கு செல்லும் வழியிலேயே மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த இரு கார்களை, மிகவும் தந்திரோபாய நகர்வாக மோதியே கைது நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கத்தியொன்று மாத்திரமே கைப்பற்றப்பட்டுள்ளது என நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர்.
போண்டி தாக்குதலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.