போண்டி பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகத்திடம் பிரதமர் அந்தோனி அல்பானீஸி மன்னிப்பு கோரியுள்ளார்.
சிட்னி, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து இரு துப்பாக்கிதாரிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்படி தாக்குதலால் யூத சமூகமும், ஆஸ்திரேலியாவும் எதிர்கொண்ட நிலை தொடர்பில் மன்னிப்பு கோருவதாக பிரதமர் இன்று அறிவித்தார்.
உள்துறை அமைச்சருடன் இணைந்து கன்பராவில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார்.
அத்துடன், அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டவுள்ள சட்டதிருத்தங்கள் தொடர்பிலும் பிரதமர் விவரித்தார்.
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத பட்டியலில் உள்ளடக்கப்படாத சட்டவிரோதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் உள்துறை அமைச்சர் விவரித்துள்ளார்.