தடை செய்யப்பட்ட நாஜி சின்னத்தை காட்சிப்படுத்தய பிரிட்டன் பிரஜை நாடு கடத்தப்படவுள்ளார் என்பதை ஆஸ்திரேலிய உத்துறை அமைச்சர் இன்று (23) உறுதிப்படுத்தினார்.
எக்ஸ் தளத்தில் நாஜி சின்னத்தை அவர் பகிர்ந்ததாகவும், யூத சமூகத்துக்கு எதிரான கருத்துகளை ஆதரித்தார் எனவும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், 43 வயதான அவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
நாஜி சின்னங்கள், கத்திகள், கோடரிகள் மற்றும் வாள்கள் என்பன அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.
இந்நிலையிலேயே இவரது விசாவை இரத்து செய்து, நாடு கடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தென்னாபிரிக்க பிரஜையொருவரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.