நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மத்திய கடற்கரையிலுள்ள உணவகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நடைபெற்ற இத்தாக்குதலில் 63 வயது நபரொருவரே காயமடைந்துள்ளார்.
அவர் ஆபத்தான நிலையில் விமானம்மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தாக்குதலை நடத்திய 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்.