நியூகேஸில் நபரொருவர் நாஜி சின்னத்தை பச்சை குத்தி இருந்த சம்பவம் தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த நபர் அவரது கால் பகுதியிலேயே நாஜி சின்னம் தொடர்பான பச்சையை குத்தி இருந்தார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான படங்களும் பொலிஸாருக்கு நபரொருவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதியில் அவரை கண்டபோது, அச்சுறுத்தப்படுவதுபோல உணர்ந்ததாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
நியூகேஸில் என்பது பன்முக கலாசாரத்தை கொண்டுள்ள பகுதியாகும். அங்கு இப்படியான செயலுக்கு இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில யூத மக்களுக்கு எதிராக, மிக மோசமான அட்டூழியங்களைச் செய்த நாஜி அமைப்பையே எஸ்.எஸ். எனும் சின்னம் பிரதிபளிக்கின்றது.