போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் விரோதப் போக்கு அதிகரித்துள்ளதாக தேசிய இமாம்கள் சபை தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு சம்பங்கள் 200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் மேற்படி சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்லாமிய நிறுவனங்களை இலக்கு வைத்தல், முஸ்லிம் கலாச்சார ஆடைகளை அணியும் பெண்களுக்கு எதிரான மிரட்டல் மற்றும் ஒன்லைன் மூலம் எச்சரிக்கை என்பனவே இவ்வாறு அதிகரித்துள்ளன.
குறிப்பாக சிட்னியில் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்கள், நெருக்கடிக்கு இலக்காகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அதேவேளை, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.