ஆஸ்திரேலியா, பேர்த் விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் அத்துமீறி நுழைந்தார் எனக் கூறப்படும் நியூசிலாந்து பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை பேர்த் நீதிமன்றத்தில் இன்று (31) முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
25 வயதான குறித்த நபர் மதுபோதையில் இருந்தார் எனவும், அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன், பாதுகாப்பு வலயத்துக்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார்.