வெனிசுலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளதை ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர் Sussan Ley வரவேற்றுள்ளார்.
சட்டவிரோத ஜனாதிபதியாக செயல்பட்ட மதுரோ தற்போது நீதியை எதிர்கொள்கின்றார் எனவும் அவர் கூறினார்.
வெனிசுலா மீதான இராணுவ நடவடிக்கையையும், அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் கைது செய்யப்பட்டுள்ளதையும் சீனா, ரஸ்யா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
எனினும், ஆஸ்திரேலிய பிரதமர் கண்டிக்கவில்லை. தாக்குதலை வரவேற்கவும் இல்லை.
“ ஜனநாயகக் கொள்கைகள், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்க வேண்டிய அவசியம் உட்பட வெனிசுலாவின் நிலைமை குறித்து ஆஸ்திரேலியா நீண்ட காலமாக கவலைகளை எழுப்பி வருகிறது.
வெனிசுலா மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் சர்வதேச சட்டம் மற்றும் வெனிசுலாவில் அமைதியான, ஜனநாயக மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்.” – எனவும் அல்பானீஸி குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர் எதிர்க்கட்சி தலைவர், வெனிசுலா ஜனாதிபதியை சட்டவிரோத ஜனாதிபதி என குறிப்பிட்டு, அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரித்துள்ளார்.
“வெனிசுலா மக்கள் அமைதியான முறையில் ஜனநாயகத்திற்குத் திரும்புவதன் மூலம் தங்கள் இறையாண்மையை மீட்டெடுக்கும் வாய்ப்பைப் பெற தகுதியானவர்கள்.
சர்வாதிகாரிகள் மற்றும் சர்வாதிகாரிகள் தங்கள் குற்றங்களுக்கு நீதியை எதிர்கொள்ளும் உலகில் நாம் வாழ வேண்டும்." எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.