ஆஸ்திரேலிய நாயகன் என போற்றப்பட்டுவரும் அகமது அல் அகமது, ஆஷஸ் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிட்னி போண்டி பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வரலாற்று முக்கியத்துவமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, முன்களப் பணியாளர்களுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து குண்டடிப்பட்ட அகமது அல் அகமதை நேரில் அழைத்து கௌரவிக்கப்பட்டார்.