போண்டி பயங்கரவாதத் தாக்குதலின்போது மக்களை பாதுகாப்பதற்காக துணிகரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய நாயகன் என போற்றப்படும் அகமது அல் அகமது ,அமெரிக்கா சென்றுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற அவருக்கு எப்.பி.ஐ. அதிகாரிகள் பாதுகாப்பளித்தனர்.
யூத சமூகத்தை இலக்கு வைத்து போண்டியில் டிசம்பர் 14 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலின்போது துப்பாக்கி தாரியொருவரிடமிருந்து, அல் அகமது துப்பாக்கியை பறிப்பதற்கு துணிகரமாக செயல்படுவார். இச்சம்பவத்தால் அவருக்கு காயம் ஏற்பட்டது.
அவரின் இந்த செயலை அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக தலைவர்கள் பாராட்டியிருந்தனர்.
ஆஸ்திரேலியாவிலும் அவருக்கு விசேட விருது வழங்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.