ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெப்ப அலை வீசுகின்றது.இதனால் பல பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது.
ஆஸ்திரேலியாவில் 2019-20 இல் ஏற்பட்ட கோடைக்கால காட்டுத் தீயில் 30 இற்கு மேற்பட்டோர் பலியாகினர். பெருமளவான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலை இதைவிட மோசமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலத்தில் நேற்று கடும் வெப்பம் நிலவியது.
விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளது. பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.