போண்டி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பெடரல் ராயல் கமிஷனை A national royal commission அமைப்பதற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி Virginia Bell தலைமையிலேயே ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் வெளியிடவுள்ளார்.
யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர்வரை காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பெடரல் ராயல் கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்தன.
எனினும், இதற்கு பிரதமர் பச்சைக்கொடி காட்டவில்லை. புலனாய்வுதுறை மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களை செய்வதற்கு தயாரானார்.
ஆனால் அழுத்தங்கள் வழுத்த நிலையில் தற்போது பெடரல் ரோயல் கமிஷன் அமைப்பதற்கு இணங்கியுள்ளார்.