சிட்னி தென்மேற்;;கில் நேற்றிpரவு நடந்த விபத்தில் சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
17 வயது சிறுமியொருவரே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இரு கார்கள் மோதுண்டதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் இருந்த 46 வயது ஆண் மற்றும் 36 வயது பெண் ஆகியோர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு காரில் இருந்த 22 வயது ஓட்டுநருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவ பரிசோதனைக்காக பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.