ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் காட்டுத் தீ கொளுந்து விட்டெரிகின்றது.
வெப்ப அலை மற்றும் கடும் காற்று காரணமாக பேரிழிவு ஏற்படுமென அதிகாரிகள், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய மற்றும் வடகிழக்கு விக்டோரியாவிலுள்ள பல நகரங்களிலும் காட்டுத் தீ பரவிவருகின்றது.
விக்டோரியா மாநிலத்தில் மூவர் காணாமல்போயுள்ளனர். இவர்களில் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயல்படுமாறு மக்களிடம் மாநில பிரீமியர் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலம் முழவதும் 30 இற்கு மேற்பட்ட பகுதிகளில் காட்டுத் தீ பரவிவருகின்றது.
அதேவேளை, அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வெளியேற சொல்லும்பட்சத்தில் உடன் அதற்கமைய செயல்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.