விக்டோரியா, லாங்வுட் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவிய நிலையில், காணாமல்போனவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்த மூவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
விக்டோரிய மாநில பிரீமியர் ஜெசிந்தா ஆலன் இன்று மேற்படி தகவலை வெளியிட்டார்.
விக்டோரியா மாநிலவும் முழுவதும் அவசரகால அளவிலான காட்டுத் தீ தொடர்ந்து பரவிவருகின்றது.
இந்நிலையில் வெப்ப அலை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்குள் நகர்கின்றது. டவுன்ஸ்வில்லி கடற்கரையில் உருவாகிவரும் வெப்பமண்டல சூறாவளிளை எதிர்கொள்ள குயின்ஸ்லாந்து அதிகாரிகளும் தயாராகிவருகின்றனர்.
அதேவேளை, நியூ சவூத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் வெப்பநிலை இன்று 43 டிகிரி வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ஏற்படக்கூடிய எந்தவொரு தீயையும் சமாளிக்க 600 தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.