நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய பெண்ணுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் லேக் மெக்குவாரி பகுதியில் படகொன்றில், தடைசெய்யப்பட்ட நாஜி சின்னத்தை அவர் காட்சி படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 சனிக்கிழமை, ஸ்வான்சியாவில் வீடொன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர்.
வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்ட படகில் நாஜி சின்னம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே வீடு சோதிக்கப்பட்டது.
பத்து நாட்களுக்குப் பிறகு, 32 வயது பெண் கைது செய்யப்பட்டார். அவர்மீது மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வழக்கு விசாரணை பெப்ரவரி 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.