அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஈரான் மக்களின் போராட்டத்திற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் அறிவித்துள்ளார்.
ஈரானிய ஆட்சி அதன் சொந்த மக்கள் மீது நடத்தும் மிருகத்தனமான அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
போராட்டக்காரர்களைக் கொல்வது, பலத்தைப் பயன்படுத்துவது மற்றும் தன்னிச்சையான கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானில் தங்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் உடன் வெளியேற வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.