தாய்லாந்தின் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியது.
16 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.என்று போக்குவரத்து அமைச்சர் சூர்யா ஜங்ருங்கிராங்கிட் தெரிவித்தார்.
பஸ்சில் 38 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் இருந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர் பிழைத்த சில குழந்தைகளின் முகம், வாய் மற்றும் கண்களில் பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டதாக அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
மாகாணத்தின் வடக்கு பாங்காக் புறநகர்ப் பகுதியில் நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததால், பேரூந்து தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது என மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு மேம்பாலத்தின் கீழ் பேருந்து எரிந்தபோது, அடர்ந்த கறுப்பு புகையின் பெரிய மேகங்கள் வானத்தில் வெளிக்கிளம்பி பேருந்தின் தீப்பிழம்புகள் சூழ்ந்ததை வீடியோ காட்சிகள் காட்டியது.
சபா.தயாபரன்.