வெள்ள அனர்த்தத்தால் வடக்கு குயின்ஸ்லாந்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாநில பிரீமியர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
68 ஆயிரத்து 700 வரையான கால்நடைகள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.
இதனால் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தின் வடக்கு பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.