காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" முன்வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க "அமைதி வாரியம்" என்ற உயர்நிலை அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.
இந்தச் சர்வதேசக் குழுவில் இணையுமாறே அழைப்பு விடுக்கப்பட்டுள்து.
துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ட்ரம்பின் இந்த அழைப்பு தொடர்பில்ஆஸ்திரேலிய கிரீஸ் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இனப்படுகொலையை நியாயப்படுத்தும் செயல் எனவும் விமர்சித்துள்ளது.