சிட்னி, போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று (19) அஞ்சலி செலுத்தப்பட்டது.
யூத சமூகத்தை இலக்கு வைத்து டிசம்பர் 14 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர்வரை காயமடைந்தனர்.
அடுத்த மாதம் 6 ஆம் திகதியே புத்தாண்டில் நாடாளுமன்றம் கூடவிருந்தது.
எனினும், போண்டி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்ட மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்டுமாறு எதிரணிகள் வலியுறுத்தின.
இதற்கமையவே நாடாளுமன்றம் இன்று கூடியது.
இதன்போதே அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையை பிரதமர் அந்தோனி அல்பானீஸி முன்வைத்தார்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதல் போன்ற மற்றுமொரு சம்பவம் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறும் என உறுதியளித்தார் பிரதமர்.
அதேவேளை, பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு முயற்சித்த நபர்களுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.