சிட்னியில் மேலும் ஒருவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சிட்னி வடக்கு கடற்கரை பகுதிக்கு இன்று மாலை அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
சுறா தாக்குதலுக்கு இலக்கான 20 வயது நபருக்கு சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
கடந்த 24 மணி நேரத்துக்குள் சிட்னியில் நடந்த மூன்றாவது சுறா தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
இதனையடுத்து வடக்கு கடற்கரையிலுள்ள 20 பகுதிகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளன.
வாக்;ஸில் உள்ள துறைமுக கடற்கரையில் நேற்று மாலை 12 வயது சிறுவன் ஒருவர் சுறா தாக்குதலுக்கு இலக்கானார். அவரது இரு கால்களும் காயமடைந்தன.
இன்று மதியம் வடக்கு கடற்கரையில் மற்றுமொரு சிறுவன் சுறா தாக்குதலுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.