நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் மேலும் ஒருவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
கடந்த 48 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற 4ஆவது சுறா தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
மெக்குவாரிக்கு வடக்கே பாயின்ட் ப்ளோமர் கடற்கரையிலேயே அவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
39 வயதான அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் நிலை ஆபத்தாக இல்லை என தெரியவருகின்றது.
சிட்னி வடக்கு கடற்கரை பகுதியில் நேற்று மாலை 20 வயது இளைஞர் ஒருவர் அலை சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அவ்வேளையிலேயே அவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதேபோல நேற்று காலைவேளையில் வடக்கு கடற்கரை பகுதியில் 11 வயது சிறுவன் ஒருவர் சுறா தாக்குதலுக்கு இலக்கானார்.
நேற்று முன்தினம் மாலை 12 வயது சிறுவன் இவ்வாறு சுறா தாக்குதலுக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இதனையடுத்து சிட்னிவடக்கு கடற்கரையில் 20 இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.