நியூசிலாந்தில் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்துள்ளார்.
அத்துடன், தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்துள்ளார்.
பிரதமர் கிறிஸ்டோபர் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் 2023 இல் அரயணையேறியது.
எனினும், பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை வீதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் மத்தியில் பிரதமருக்கான செல்வாக்கு சரிந்துள்ளது.
இந்நிலையிலேயே மக்கள் ஆதரவை நாடி பிடித்து பார்க்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகியுள்ளது.
மறுபுறத்தில் எதிரணிக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லை. இதனால் நடைபெறவுள்ள தேர்தலானது கடும் சவால்மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்து அரசியலில் நடக்கும் சம்பவங்கள் ஆஸ்திரேலிய அரசியலிலும் எதிரொலிக்கும் நிலை காணப்படுகின்றது.