மெல்பேர்ணில் யுவதியொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருகின்றது.
வீட்டுக்கு வெளியில் காத்திருந்தவேளையிலேயெ 18 யுவதிமீது இன்று அதிகாலை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த யுவதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்கு சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
18 வயது இளைஞன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.அவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கினர். எனினும், அவரை கைது செய்யமுடியவில்லை.
இந்நிலையில் தெற்கு ஆஸ்திரேலிய எல்லையில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.