ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதாரமன்ற மாநாட்டை நிறைவுசெய்துவிட்டு, அமெரிக்காவுக்குப் புறப்பட்ட டிரம்ப்,
விமானத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார்.
ஈரான் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
”ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை சென்று கொண்டிருகிறது. அவர்களை தாக்குவதில் விருப்பமில்லை, ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலும் இளைஞர்கள் உள்பட 837 பேரை வியாழக்கிழமை தூக்கிலிடத் திட்டமிட்டிருந்தனர்.
அவர்களை தூக்கிலிட்டால் இதுவரை காணாத வகையில் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என நான் எச்சரித்தேன். ஈரானில் அணு திட்டங்களை அழித்ததைவிட பயங்கரமாக இருக்கும் எனத் தெரிவித்தேன்.
இதன் எதிரொலியாக தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தார்கள். ஈரானை நோக்கி செல்லும் கடற்படையைப் பயன்படுத்த வேண்டாம் என்றே நினைக்கிறேன். பொருத்திருந்து பார்ப்போம்.” – என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.