நியூ சவூத் வேல்ஸில் மூவரை நேற்று சுட்டுக்கொலை செய்த நபர், குடும்ப வன்முறைக்காக கைது செய்யப்பட்டு, பிணையில் வந்த நபர் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜுலியன் பியர்பாயின்ட் என்றழைக்கப்படும் 37 வயதான கொலையாளி தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை தொடர்கின்றது.
100 பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நடக்கும்வரையில் அவர் பிணை நிபந்தனைகளை மீறி இருக்கவில்லை எனவும், மேற்படி சம்பவம்கூட குடும்ப வன்முறையால் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் குற்றவாளியுடன் தொடர்புடையவர்கள் என தெரியவருகின்றது.
குறித்த நபரிடம் துப்பாக்கி உரிமம் இல்லை. எனவே, அவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது.