லேபர் கட்சியிலிருந்து வெளியேறிய செனட்டர் Fatima Payman புதியதொரு அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடர்பில் லேபர் அரசின் அணுகுமுறையை செனட்டர் கடுமையாக விமர்சித்துவந்தார்.
இதனால் லேபர் கட்சியில் கூட்டங்களில் பங்கேற்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் லேபர் கட்சியிலிருந்து அவர் வெளியேறினார்.
புதிய கட்சியை ஆரம்பிப்பார் என அப்போது தகவல் வெளியானபோதிலும் அதனை செனட்டர் நிராகரித்துவிட்டார். எனினும், தற்போது புதிய அரசியல் பயணத்தை தொடங்கும் முடிவை எடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
இதற்கமைய அரசியலில் நீண்ட அனுபவம் உடைய Glenn Druery ஐ தனது தலைமை அதிகாரியாக செனட்டர் Fatima Paymanநியமித்துள்ளார்.
புதிய கட்சியை ஆரம்பித்து பதிவு செய்வதற்கு மூன்று மாதங்கள்வரை செல்லும். அதற்குள் தேர்தல் கூட்டாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் பதிவு செய்ய முடியாது.