குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற இலகு ரக விமான விபத்தில் இரண்டு பலியாகியுள்ளனர் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஓற்றை எஞ்சின் கொண்ட இலகுரக விமானியும்,ஆணொருவர் பயணித்துள்ளனர்.
இன்று காலை 6.00 மணியளவில் பிரிஸ்பேன் நகரத்தின் தெற்கே உள்ள வூங்கூல்பா பகுதியில் அமைந்துள்ள ஹெக் பீல்டில் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது.
முதற்கட்ட விசாரணைகளின் படி, விமானத்தை இயக்கியவர் பீன்லீ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விமானத்தில் பயணித்த மற்றொரு நபர் சிட்னியைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது.
கிராஸ் ரோடு அருகிலுள்ள விமான தளத்திற்கு காலை 5.57 மணியளவில் குயின்ஸ்லாந்து அவசர மருத்துவ சேவை அணிகள் அனுப்பப்பட்டன.
சம்பவ இடத்தில் இருவரும் மிகக் கடுமையான உயிர் அபாயக் காயங்களுடன் இருந்ததாகவும், அங்கேயே உயிரிழந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்தால் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த கிராமப்புறம் மற்றும் நகர தீயணைப்பு படையினர் இணைந்து செயல்பட்டனர். முற்பகல் 11.00 மணியளவில் சுமார் 150 ஏக்கர் வயல்கள் மற்றும் காடு பகுதிகளுக்கு தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பமும் பலத்த காற்றும் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக இருந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் குயின்ஸ்லாந்து காவல்துறை, விபத்து விசாரணை பிரிவு மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுத்துவருகின்றது.