ஆஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் விசா இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானப் பயணம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னரே இவ்வாறு விசா இரத்து செய்யப்பட்டதாக வலதுசாரி நிலைப்பாட்டைக் கொண்ட ஆஸ்திரேலிய யூத சங்கம் AJA தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பெர்க் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
வெறுப்புணர்வை பரப்புவதற்கு ஆஸ்திரேலியா களம் அல்ல எனவும் அவர் கூறினார்.
மேலும், “ஆஸ்திரேலியாவுக்கு வர விரும்புவோர் உரிய விசாவிற்காக விண்ணப்பித்து, சரியான நோக்கத்துடன் வர வேண்டும்” எனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்வினையாக, யாஹ_த் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு, லேபர் அரசு ‘அதிகாரத் துஷ்பிரயோகம்’ மற்றும் ‘தணிக்கை’ மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.
பிரிட்டனில் வளர்ந்து, அண்மையில் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த சமி யாஹூத் ஆஸ்திரேலியாவில் ‘சுய பாதுகாப்பு பயிற்சிகள்’ நடத்தவும், என்ற பிரச்சாரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டிருந்தார்.
இஸ்லாம் தடை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்திவந்தார்.