இலங்கைக்கு ஜனவரி ஒன்று முதல் 25 வரையான காலப்பகுதிக்குள் ஆஸ்திரேலியாவில் இருந்து 9 ஆயிரத்து 564 பேர் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 41 ஆயிரத்து 603 பேரும், பிரிட்டனில் இருந்து 23 ஆயிரத்து 329 பேரும், ரஷ்யாவில் இருந்து 22 ஆயிரத்து 876 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.