இஸ்ரேல் ஜனாதிபதி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு வரவுள்ள நிலையில், அவரது விஜயத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
அவருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தது தவறு என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், யூத சமூகத்துக்கு ஆதரவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது என பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
ஆனால், காசா போர் சூழலில் இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகை சமூகப் பிளவுகளை ஏற்படுத்தும் என லேபர் கட்சிக்குள் உள்ள சில எம்.பிக்களும் சுயேட்சை உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராகஆஸ்திரேலியாவில் போராட்டங்களை நடத்துவதற்கு பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
பிரதமர் அல்பானிஸ், இந்த வருகை தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் எனக் கூறி அரசின் முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், பாதுகாப்பு காரணங்களால் சிட்னியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.