பேர்த் மேற்கு பகுதியில் மோஸ்மன் பார்க்கிலுள்ள வீடொன்றில் இருந்து பெற்றோர் மற்றும் இரு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனரா அல்லது இது தற்கொலைச் சம்பவமா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
50 வயதான தந்தை, 49 வயதான தாய் மற்றும் 14, 16 வயதுகளுடைய பிள்ளைகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த மூன்று செல்லப் பிராணிகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளும் கடுமையான உடல்நலச் சவால்களை எதிர்கொண்டிருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.இது ஒரு கொலை–தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது,” என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
குடும்ப வன்முறை தொடர்பில் மேற்படி குடும்பம் பற்றி எவ்வித முறைப்பாடும் இல்லை எனவும், சம்பவ இடத்தில் ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.