இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராஜாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இன்று காலை கே.கே.எஸ். வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தத் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.