ஈரான் மக்கள் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறை காரணமாக, ஆஸ்திரேலியா அந்நாட்டின் மீது கூடுதல் நிதித் தடைகளை விதித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை அதிகாரிகள் 20 பேர் மற்றும் 3 நிறுவனங்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளன.
வன்முறை மற்றும் இணைய முடக்கத்திற்கு எதிராக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே ஆஸ்திரேலியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானின் போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா அண்மையில் வலியுறுத்தி இருந்தது.