அடிலெய்டின் தெற்குப் பகுதியில் நேற்று இடம்பெற்ற இலகுரக விமான விபத்தில் மூன்று உயிரிழந்துள்ளனர் என்று தெற்கு ஆஸ்திரேலியப் பொலிஸார் தெரிவித்தனர்.
கூல்வா சவுத் அருகேயுள்ள லாங் பே பகுதியில் இலகு ரக விமானமொன்று கடலில் விழந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் 57 வயது விமானியும், இரு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
ஆஸ்திரேலிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியக அதிகாரிகள் இன்று சம்பவ இடத்திற்குச் சென்று விசாரிக்க உள்ளனர்.