இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அரசுமுறை பயணமாக சிட்னி வருகை தரவுள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் ஆயிரக்கணக்கான பொலிஸார் நகரமெங்கும் பகுவிக்கப்படவுள்ளனர்.
இதனிடையே, பாலஸ்தீன ஆதரவு பேரணி திட்டமிடப்பட்டுள்ளதால், அமைதியை பேணுமாறு NSW பிரீமியர் கிறிஸ் மின்ஸ் பொதுமக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹெர்சாக் வருகையை முன்னிட்டு, இன்று முதல் பெரும் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை பல சாலைகள் மூடப்படுவதுடன், CBD, பைர்மாண்ட் மற்றும் கிழக்கு புறநகரங்களை உள்ளடக்கிய பெரிய “Exclusion Zone” அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Exclusion Zone-இல், பொலிசார் எந்த காரணத்திற்காகவும் நபர்களை அங்கிருந்து நகர்த்த உத்தரவிடலாம்
வாரண்ட் இன்றி நபர்கள் மற்றும் வாகனங்களை சோதனை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
மொத்தமாக, 3,500 பொலிஸ் அதிகாரிகள் ஹெர்சாகின் மூன்று நாள் பயண காலம் முழுவதும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
சட்டப்படி வழங்கப்படும் பொலிஸ் உத்தரவுகளை மீறினால், $5,500 வரை அபராதம் அல்லது முக்கிய நிகழ்வு பகுதிகளில் இருந்து விலக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
இஸ்ரேல் ஜனாதிபதியை நகரம் முழுவதும் அழைத்துச் செல்ல பெரும் பாதுகாப்புடன் கூடிய வாகன அணிவகுப்பு (motorcade) பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாலஸ்தீன ஆதரவு பேரணியின் திட்டமிடப்பட்ட பாதை, அறிவிக்கப்பட்ட Exclusion Zone-க்குள் வருவதாகபொலிசார் தெரிவித்துள்ளனர்.